close
Choose your channels

நாசமா போகட்டும்: பிரபல இயக்குனரின் விரக்தி பதிவு!

Wednesday, January 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என தமிழ் இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விரக்தியாக பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் இயக்குனர் லட்சுமண் இயக்கிய திரைப்படம் ’பூமி’. இந்த படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீசானது என்பதும் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 'பூமி' படம் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "இதுவரை நான் பார்த்த படங்களில் 'பூமி' போன்ற ஒரு மோசமான படத்தைப் பார்த்ததில்லை என்றும், 'சுறா', 'ஆழ்வார்', 'அஞ்சான்', 'ராஜபாட்டை' வரிசையில் இந்த படம் இருந்ததாகவும், இந்த படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை எதுவுமே சரியாக இல்லை என்றும், இயக்குநர் லட்சுமணுடன் பணிபுரிவதை நிறுத்துங்கள் ஜெயம் ரவி" என்றும் தெரிவித்து இருந்தார்

ரசிகரின் இந்த பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் இயக்குனர் லட்சுமண், ‘"சார். நம்ம எதிர்காலத் தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்தப் படம் எடுத்தேன். உங்களுக்காகத்தான் எடுத்தேன். ‘ரோமியோ ஜூலியட்’ எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். சகோதரரே, நீங்க சிறப்பு, ஜெயிச்சிட்டீங்க. நான் தோத்துட்டேன்" என்று விரக்தியுடன் பதிவு செய்துள்ளார். இயக்குனர் லட்சுமணன் பதிவு செய்துள்ள இந்த டுவீட்டுக்கு கண்டனங்களும் ஆறுதல்களையும் ரசிகர்கள் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.