உக்ரைனில் போர்ப்பதற்றம் தொடர்பாக அமெரிக்கா எடுத்திருக்கும் முக்கிய முடிவு!

  • IndiaGlitz, [Wednesday,February 23 2022]

உக்ரைனில் ரஷ்யா இராணுவம் ஊடுருவி தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருவதால் ரஷ்யாவின் முக்கிய நிதி நிறுவனங்கள் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிதித் தடையை அறிவித்து இருக்கிறார். மேலும் உக்ரைனில் பதற்றங்கள் அதிகரித்தால் கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சோவியத் நாடுகளுள் ஒன்றான உக்ரைன் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் சுதந்திர நாடாக இயங்கிவருகிறது. ஆனாலும் பொருளாதாரம், வர்த்தகம் போன்ற தேவைகளுக்காக ரஷ்யாவையே நாடியிருக்கும் நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா இராணுவம் தற்போது போர்த்துவங்க தயாராகி வருகிறது. மேலும் கிழக்கு உக்ரைன் பகுதியிலுள்ள டான்ஸ்க், லாஹன்ஸ்க் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள ரஷ்யா அதைத் தனி குடியரசு நாடாகவும் அறிவித்திருக்கிறது.

உக்ரைனில் 24 மாகாணங்கள் உள்ள நிலையில் கிழக்குப் பகுதியிலுள்ள டான்ஸ்க், லாஹன்ஸ்க் எனும் இரு மாகாணங்களிலும் ரஷ்யா பூர்வீகக் குடிகள் அதிகம் வாழ்ந்து வந்தனர். மேலும் இங்குள்ள கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசுக்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சிசெய்து வந்த நிலையில் ரஷ்யா இவர்களுக்கு ஆதரவு அளித்தும் வந்தது. இந்நிலையில் தற்போது உக்ரைனில் இருந்து இவற்றை பிரித்துவிட்ட ரஷ்யா டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு, லுஹனன்ஸ்க் மக்கள் குடியரசு எனத் தனி குடியரசு நாடுகளாக அறிவித்து இருக்கிறது.

இதையடுத்து ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இரண்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதன் முதற்கட்டமாக ரஷ்யா வங்கி மற்றும் மிலிட்டிரி வங்கி ஆகிய முக்கிய நிதி நிறுவனங்களுக்கும் நிதித்தடையை அதிபர் ஜோ பைடன் அறிவித்து இருக்கிறார். மேலும் போர்ப்பதற்றத்தை அதிகரிக்கும் பட்சத்தில் ரஷ்யா மீது கடுயைமான பொருளாதாரத் தடையை விதிப்பதற்கும் ஜோ பைடன் ஆலோசனை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக அதன் தலைநகர் கீவி பகுதிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் ஒன்று நேற்று இயக்கப்பட்டது. இதில் 256 மாணவர்கள், ஊழியர்கள் இந்தியாவிற்கு திரும்பிய நிலையில் தொடர்ந்து வரும் 25, 27 மற்றும் மார்ச் 6 ஆம் தேதி மீண்டும் விமானங்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

More News

அஜித்தின் 'வலிமை' படத்தில் இடம்பெற்ற மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் நாளை உலகம் எங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தில் மறைந்த பழம்பெரும் நடிகர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் இடம்பெற்றுள்ளதாக

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்: நடிகர் சங்க வாக்குகள் எண்ண தடையா?

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணலாம் என சற்று முன்னர் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பதை பார்த்தோம் .

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு தயாரான சிம்பு: வைரல் புகைப்படம்!

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல் அவர்கள் இந்த நிகழ்ச்சியில்

எல்லா புகழும் அவருக்கே: 15 ஆண்டு 'பருத்தி வீரன்' குறித்து நெகிழ்ச்சியுடன் கார்த்தி!

கடந்த 2007ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான 'பருத்தி வீரன்' தற்போது 15 ஆண்டுகாலம் என்ற மைல்கல்லை தொட்டிருக்கும் நிலையில் இது குறித்து நெகிழ்ச்சியுடன் கார்த்தி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

'காதலுக்கு மரியாதை' பட நடிகை காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை' உள்பட ஒரு தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த பழம்பெரும் நடிகை லலிதா என்பவர் காலமானார்.