close
Choose your channels

யோகிபாபுவின் 'தர்மபிரபு' படத்தின் முக்கிய அறிவிப்பு!

Friday, May 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தர்மபிரபு. எமதர்மன் மகனாக யோகிபாபு நடித்துள்ள நிலையில் இந்த படம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் என்பதால் நல்ல எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அனேகமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

யோகிபாபு, கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக், ரேகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை முத்துகுமரன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.