மீண்டும் களத்தில் குதித்த ஓவியா: ரசிகரகள் மகிழ்ச்சி

  • IndiaGlitz, [Monday,August 28 2017]

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆர்த்தி மற்றும் ஜூலி மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஓவியா மீண்டும் தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை தட்டிவிட்டுள்ளார். மீண்டும் டுவிட்டரில் ரீஎண்ட்ரி தந்துள்ள ஓவியாவுக்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

தன் மீது மிகுந்த அன்பு வைத்துள்ள ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி கூறிய ஓவியா, தனக்கு கிடைத்த அனைவரின் அன்பை ஒரு மிகப்பெரிய ஆசிர்வாதமாக கருதுவதாக தெரிவித்துள்ளார். ஓவியாவின் இந்த ஒரே ஒரு டுவீட்டுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகளும், ரீடுவீட்டுகளும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் 22ஆம் தேதிக்கு பின்னர் இந்த டுவீட்டை பதிவு செய்துள்ள ஓவியா, இனி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்று கருதப்படுகிறது.

More News

கிளிசரின் போடாமல் நடிகையை அழ வைத்த இயக்குனர்

சமீபத்தில் வெளியான ராம் இயக்கிய 'தரமணி' திரைப்படம் பரவலாக பாராட்டப்பட்டிருப்பதோடு வசூல் ரீதிலும் வெற்றிபெற்றுள்ளது.

ஆன்மீக சாமியார் ராம் ரஹிம் சிங் தண்டனை அறிவிப்பு

ஆன்மீக அமைப்பு ஒன்றின் தலைவரான ராம் ரஹிம் சிங் என்பவர் தன்னுடைய ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

வந்தவுடன் வேலையை ஆரம்பித்த ஜூலி!

என்ன தான் செய்தாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போலவே சிலரை மாற்றவே முடியாது என்று பெரியோர்கள் கூறுவதுண்டு

இத்தாலியில் மணிரத்னம் மகனுக்கு ஏற்பட்ட பிரச்சனை: சுஹாசினி டுவீட்டால் பரபரப்பு

நட்சத்திர ஜோடியான மணிரத்னம்-சுஹாசினியின் ஒரே மகன் நந்தன் வெளிநாட்டில் அரசியல் மற்றும் தத்துவியல் படித்து வருகிறார்...

ரஜினியின் '2.0' தெலுங்கு ரிலீஸ் உரிமையின் வியாபாரம் இத்தனை கோடியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது...