உறுதியானது ஓவியா-கமல் உரையாடல்

  • IndiaGlitz, [Saturday,August 05 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று உளவியல் சிகிச்சைக்காக வெளியேறிய ஓவியா, மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு இன்று அல்லது நாளை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சற்றுமுன் கமல்ஹாசனுடன் ஓவியா பேசிக்கொண்டிருக்கும் ஸ்டில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு பங்கேற்பாளர்களும் கமல்ஹாசனுடன் தனது அனுபவங்களை பகிர்ந்துவிட்டுத்தான் செல்வார்கள். அந்த வகையில் ஓவியாவும் கமல்ஹாசனுடன் பேசும் ஸ்டில் தற்போது வெளிவந்துள்ளது.
நேற்று ஓவியா வெளியேறியபோது அவர் இருந்த மனநிலையில் இந்த பேச்சுவார்த்தை நடந்திருக்கும் என்ற கூற வாய்ப்பில்லை. எனவே இந்த உரையாடல் இன்று நடந்திருக்கலாம் என தெரிகிறது. இந்த உரையாடலுக்கு பின் ஓவியா பிக்பாஸ் வீட்டுக்கு மீண்டும் திரும்புகிறாரா? அல்லது மற்ற பங்கேற்பாளர்கள் போல வெளியே செல்லும் முன் தனது அனுபவத்தை கூறிவிட்டு வெளியே செல்கிறாரா? என்பதை இன்று மற்றும் நாளைய நிகழ்ச்சி முழுவதும் ஒளிபரப்பான பின்னரே தெரியவரும்

More News

ஜூலிக்கு ஆர்த்தியின் அதிரடி பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'உண்மை, உண்மையை தவிர வேறு இல்லை' என்ற கேரக்டரில் ஓவியாவும், 'பொய், பொய்யை தவிர வேறு வார்த்தை எனது வாயில் வராது' என்ற கேரக்டரில் ஜூலியும் கலந்து கொண்டிருப்பது முரண்பாடுகளில் வடிவம் என்றே கூறலாம்.

ஓவியா தற்கொலை முயற்சி குறித்து போலீஸ் புகார்: விரைவில் விசாரணை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா மன அழுத்தம் காரணமாக நேற்று நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்ததாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்ற பங்கேற்பாளர்கள் அவரை காப்பாற்றியது போன்ற காட்சியும் நேற்று ஒளிபரப்பானது...

ஓவியா பற்றி கமல் கூறும் புரமோ வீடியோ என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறிய விவகாரம் காரணமாக அந்த சேனலை மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனையும் ஓவியா ஆர்மியினர் விமர்சனம் செய்து வந்தார்கள்...

பிக் பாஸ் வீட்டுக்கு மீண்டும் திரும்பினார் ஓவியா?

பிக்பாஸ் வீட்டின் பங்கேற்பாளரான ஓவியா நேற்று வெளியேறியதாக வந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...

ரஜினி அரசியலுக்கு வருவது சரியா? ஷாருக்கான் கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவிரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து பலர் பலவிதமாக கருத்து கூறி வருகின்றனர்...