close
Choose your channels

'பிக்பாஸ் 3': மீண்டும் கலக்க காத்திருக்கும் கமல்ஹாசன்!

Wednesday, May 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 1, பிக்பாஸ் 2 ஆகிய இரண்டுமே தமிழ் தொலைக்காட்சி வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பிக்பாஸ் 3 விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கான புரமோஷன் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் 1,2, போலவே பிக்பாஸ் 3 நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. இருப்பினும் அரசியல் மற்றும் 'இந்தியன் 2' பணிகளுக்கு இடையே அவர் இதில் கலந்து கொள்வாரா? என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால் 'இந்தியன் 2' திரைப்படம் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்டதாக கூறப்பட்டு வருகிறது. அதேபோல் தேர்தல் பணிகளும் முடிந்துவிட்டது என்பதால் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பூந்தமல்லி அருகேயுள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கான புரமோஷன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். விரைவில் புரமோஷன் வீடியோக்கள் வெளியாகும் என்றும், பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஜூனில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.