பிக்பாஸ்: நாடகக்காரி விருதை நாடகக்காரியிடம் இருந்து பெற்ற சுஜா

  • IndiaGlitz, [Monday,September 04 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70வது நாளை கடந்து வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ் பங்கேற்பாளர்களுக்கு விருது வழங்கும் நடைபெறுவதாக இன்றைய புரமோ வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஜாவிற்கு நாடகக்காரி என்ற விருதை ஜூலி அளித்தார். விருதை பெற்று கொண்ட சுஜா, 'நாடகக்காரி' என்ற விருதை ஒரு நாடகக்காரியிடம் இருந்து பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.

பின்னர் பிந்துவுக்கு 'மந்த விருது', கணேஷூக்கு 'சுயநலவாதி விருது' மற்றும் சினேகனுக்கு 'தந்திரன்' விருது வழங்கப்பட்டது. தந்திரன் விருதை சக்தியிடம் இருந்து பெற்ற சினேகன், 'என்னை விமர்சிக்க என்னை தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லை' என்று சக்தியிடமே கூறியது சர்ச்சையை உண்டாக்கும் என தெரிகிறது. மேலும் இந்த புரமோவின் இறுதியில் சுஜா ஆவேசமாக சவால் விட்டதும் இன்றைய நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

More News

பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல மறுத்த பிரபல நடிகை

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேறு புதிய போட்டியாளர்கள் கிடைக்காததால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களே மீண்டும் மீண்டும் இடம்பெற்று வருகின்றனர்...

ஏழைகள் ஏழைகளாகவே சாகவேண்டுமா? அனிதா மரணம் குறித்து சிவகுமார்

நீட் தேர்வு காரணமாக தனது இன்னுயிரை நீத்து கொண்ட அனிதா குறித்தும், இன்றைய கல்விமுறை, நீட் தேர்வால் பாதிக்கப்படும் ஏழை மாணவர்கள் குறித்தும் நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...

அடுத்த தலைமுறைக்கு சினிமாவை விட அரசியல் முக்கியம். விஜய்சேதுபதி

நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவின் மரணத்திற்காக சென்னை லயோலா கல்லூரியில் 'அனிதா நினைவேந்தல்' கூட்டம் நடைபெற்றது.

இது இன்னொரு சுதந்திர போராட்டம்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஆவேசம்

மருத்துவ படிப்பின் கனவு கலைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் துயர முடிவு தமிழகத்தில் உள்ள அனைவரையும் ஆத்திரம் கொள்ள வைத்த நிலையில் கமல்ஹாசன் போன்ற சமூக சிந்தனையுடன் மக்கள் மீது நல்ல அக்கறை கொண்டவர்களுக்கு இருமடங்கு ஆத்திரம் எழுந்துள்ளது...

தமிழக அரசின் நிதியுதவியை வாங்க மறுத்த அனிதாவின் சகோதரர்கள்

தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் குழப்பங்களால் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கவில்லை.