close
Choose your channels

ஆண்கள் டாய்லெட்டில் செல்பி எடுத்த பிக்பாஸ் நடிகை

Tuesday, September 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் காஜல். இவர் இதய திருடன், டிஷ்யூம், கள்வனின் காதலி, பெருமாள், சிங்கம், கோ, வேலூர் மாவட்டம் உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களால் கவனிக்கப்படாமல் இருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் திடீரென பிரபலமானார்

இருப்பினும் இவரால் பிக்பாஸ் வீட்டில் ஒருசில வாரங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட காஜல், தற்போது தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

ஆண்கள் டாய்லெட்டில் செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள காஜல், 'நான் ஏன் இங்கே இருக்கின்றேன்' தெரியுமா? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்' என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இந்த பதிவிற்கு பெரும்பாலான ரசிகர்கள் கேலியும் கிண்டலுடன் கூடிய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வரும் வெள்ளியன்று வெளியாகும் வினய் நடித்த 'ஆயிரத்தில் இருவர்' படத்தில் காஜல் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.