close
Choose your channels

பிக்பாஸ் சீசன் 3ல் இருந்து வெளியே வந்த நடிகைக்கு 'தல 60' பட வாய்ப்பு?

Monday, August 19, 2019 • தமிழ் Comments

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த 8ஆம் தேதி வெளியாகி மூன்றாவது வாரமாக வெற்றி நடை போட்டு வரும் நிலையில், அஜித்தின் அடுத்த படமான 'தல 60' திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் பூஜையுடன் தொடங்க உள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் தயாரிப்பாளர் போனிகபூரின் மகள் ஜான்வி கபூர் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது பிக்பாஸ் 3 சீசனில் இருந்து வெளியே வந்த நடிகை ஒருவருக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

பிக்பாஸ் 3 சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான ரேஷ்மா கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். முதல் முறையாக எவிக்சன் பட்டியலில் இணைந்த ரேஷ்மா வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் அஜீத் நடிப்பில் எச்.வினோத் இயக்கவுள்ள 'தல 60' திரைப்படத்தில் ரேஷ்மா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ரேஷ்மா ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கேரக்டரால் ரேஷ்மா பிரபலமானாலும், அவரை பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் பிரபலமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz