close
Choose your channels

கொரோனாவுக்கு எதிரான போரில் களமிறங்கும் பிக்பாஸ் ஜூலி

Monday, April 13, 2020 • தமிழ் Comments

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராளி என்பதால் ஆரம்பத்தில் இவர் மீது நல்ல மரியாதை இருந்தது. ஆனால் ஓவியாவை எப்போது இவர் எதிரியாக பார்த்தோரோ, அப்போதே மக்கள் இவரை எதிரியாக பார்க்க தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒருசில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து வந்த ஜூலி, கிட்டத்தட்ட தனது நர்ஸ் தொழிலை மறந்துவிட்டதாகவே கருதப்பட்டது. இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் மீண்டும் நர்ஸ் தொழிலுக்கு ஜூலி திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதற்காக அவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்க பயிற்சியை முடித்துள்ளதாகவும் விரைவில் அவர் தனது புனிதமான நர்ஸிங் சேவைக்கு திரும்ப உள்ளதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நெட்டிசன்கள் ஜூலிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz