சக்சஸ் ஆனது பிக்பாஸ் காதல்: பிக்பாஸ் வின்னரை மணக்கும் சக போட்டியாளர்

  • IndiaGlitz, [Monday,October 21 2019]

பிரபல கன்னட திரையுலக இசையமைப்பாளரும் பிக்பாஸ் கன்னடம் 5 நிகழ்ச்சியின் வின்னருமான சந்தன் ஷெட்டி, அதே நிகழ்ச்சியில் 4வது இடம்பெற்ற நிவேதா கெளடா என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளார். இவர்களுடைய திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது

பிக்பாஸ் கன்னடம் 5 நிகழ்ச்சியின்போது காதலித்த சந்தன் ஷெட்டிக்கும், நிவேதா கெளடாவுக்கும் தற்போது இருவீட்டார் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி மைசூரில் நடைபெற்றது. தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இருவீட்டாருக்கும் நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது

பிக்பாஸ் கன்னடம் நிகழ்ச்சியில் சந்தன் ஷெட்டி மற்றும் நிவேதா போட்டியாளர்களாக இருந்தபோது முதலில் நட்பு மட்டுமே இருந்தது. ஆனால் போகப்போக அந்த நட்பு காதலாக மாறி தற்போது அந்த காதல் திருமணம் வரை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பிக்பாஸ் தமிழ் 3 காதலர்களான கவின், லாஸ்லியா திருமணம் செய்து கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்லை: 'கைதி' டிக்கெட் எடுத்த ரசிகரை கலாய்த்த தயாரிப்பாளர்

வரும் வெள்ளியன்று விஜய் நடித்த 'பிகில்' மற்றும் கார்த்தி நடித்த 'கைதி' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில் விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்கள் டுவிட்டரில் சரமாரியாக மோதிக்கொள்கின்றனர்.

அரசு அறிவிப்பால் 'பிகில்', 'கைதி' படக்குழுவினர்களுக்கு கொண்டாட்டம்

விஜய் நடித்த 'பிகில்' மற்றும் கார்த்தி நடித்த 'கைதி' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது.

அமலாபாலை அடுத்து நிர்வாணமாக நடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகை

நடிகை அமலாபால் ஆடை இல்லாமல் நடித்த 'ஆடை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் என்பவர் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது

தனுஷின் அடுத்த படத்தில் பிரபல மலையாள நடிகர் 

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறா

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர்: சஸ்பென்ஸை உடைத்த கார்த்தி

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த 'சூரரைப்போற்று' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அவர் அடுத்ததாக ஹரி, வெற்றிமாறன் மற்றும் சிறுத்தை சிவா