close
Choose your channels

சினேகன் தந்திரக்காரர் மட்டுமே! தைரியசாலி இல்லை: காஜல்

Tuesday, September 5, 2017 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய காஜல், வெளியே வந்த பின்னர் அளித்த பேட்டியில் சினேகன் குறித்துதான் அதிகம் குறைகூறியுள்ளார்.

சினேகன் எப்போதுமே மற்றவர்களின் முதுகுக்கு பின்னால் மட்டுமே புறம் பேசுபவர் என்றும், மக்கள் முன்பும் சரி, பங்கேற்பாளர்கள் முன்பும் சரி தைரியமாக பேச மாட்டார் என்றும் கூறியுள்ளார். அதனால் தான் அவர் இவ்வளவு நாட்களாக அந்த வீட்டில் தாக்கு பிடித்து வருவதாக கூறிய காஜல், நான் முதல் நாளில் இருந்தே சினேகனுக்கு தான் குறி வைத்தேன், ஆனால் அவர் தந்திரமாக தப்பித்துவிட்டார் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பலர் நினைப்பது போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்கிரிப்ட் எல்லாம் இல்லை என்றும், அவ்வாறு சிலர் நினைப்பது தவறு என்றும் கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டுமானால் போலியாக நடிக்க வேண்டியது உள்ளதாகவும், அவ்வாறு தன்னால் நடிக்க முடியாது என்பதால் தான் வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz