நான் இன்னும் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் மதுமிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் அபிராமி-மிராமிதுன் மோதல் பார்வையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை தந்த நிலையில் இந்த வாரத்திற்கான கண்டெண்ட் 'தமிழ்ப்பொண்ணு' கலாச்சாரம் என பிக்பாஸ் திரைக்கதையில் பிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. அனேகமாக இந்த ஒரு கண்டெண்ட் இந்த வாரம் முழுக்க ஓடும் என தெரிகிறது

மதுமிதா தான் ஒரு தமிழ்ப்பொண்ணு என்று கூறியதும், மற்ற மாநில பெண்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சரியமான ஒன்றே அல்ல. பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலும் இதேபோன்ற ஒரு பிரச்சனை வந்தபோது ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் ஒன்று சேர்ந்து எதிர்த்தனர். ஆனால் இந்த முறை 'தமிழ்ப்பொண்ணு' என்று கூறியதற்கு தமிழ்ப்பெண்ணான வனிதாவே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கவினும் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகிய இன்றைய மூன்றாம் புரமோ வீடியோவில், 'கரெக்டாக இருந்தாலே இந்த ஊர்ல பிரச்சனைதான், உலகத்திலேயே நியாயமானவன் நான் தான் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று கவின் கூறுகிறார்.

இன்னொருபுறம் மதுமிதா, 'என்னோட பார்வை தவறாக இருக்குது மீதி எல்லாரும் கரெக்டாக இருக்காங்க, எல்லாரும் கேமை நல்லா விளையாடுறாங்க நான் தான் இன்னும் கேமுக்குள்ளேயே வராம வெளிய நின்னு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றேன்' என்று தனியே புலம்புகிறார்.

More News

ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை புரமோஷன் செய்யும் கிரிக்கெட் வீராங்கனை

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இயக்குனர் சங்கத்தலைவர்: பாரதிராஜா எடுத்த அதிரடி முடிவு

இயக்குனர் சங்க தலைவராக ஒரு மாதத்துக்கு முன்னர் இயக்குனர் பாரதிராஜா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்று திடிரென அவர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

நாமினேஷனில் லாஸ்லியாவுமா? அதிர்ச்சியில் ஆர்மியினர்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் யாருடைய வம்புக்கும் போகாமல் தன் அழகாலும் வசீகரத்தாலும் அனைவர் மனதையும் கவர்ந்து வந்த லாஸ்லியாவை யாருமே நாமினேஷன் செய்யவில்லை

இதுபோல் ஒரு படம் இதுவரை வந்ததில்லை, இனியும் வராது: விக்ராந்த்

ஒட்டகத்தை முக்கிய கேரக்டராக்கி உருவாக்கப்பட்டுள்ள முதல் இந்திய திரைப்படமான 'பக்ரீத்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

உலக பிரபலம் தமிழருடன் சச்சின் விரும்பி எடுத்த புகைப்படம்

இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது இந்தியர்கள் மட்டுமின்றி உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின்