close
Choose your channels

ஓவியா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம் ஆரம்பமா?

Saturday, August 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றுவிட்ட ஓவியாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை ஓவியா ஆர்மியினர், ஓவியா புரட்சி படையினர் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் விஜய் 62 உள்பட ஒருசில படங்களில் ஓவியா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டாலும் இன்னும் ஓவியாவின் அடுத்த படம் எது? என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை
இந்த நிலையில் விமல், சிவா, அஞ்சலி , ஓவியா நடிப்பில் சுந்தர் சி இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'கலகலப்பு' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாகவும், இந்த படத்தில் ஓவியா மீண்டும் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஓவியாவை மீண்டும் பெரிய திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கும் நிலையில் ;கலகலப்பு 2' படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.