close
Choose your channels

பிக்பாஸ் சம்பளம் எப்ப வரும்ன்னு தெரியாது.. மைனாவின் வரவேற்பு வீடியோ

Thursday, January 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அசீம் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் இரண்டாவது இடத்தை விக்ரமன், மூன்றாவது இடத்தை ஷிவின் ஆகியோர் பெற்றார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் 7வது நாளில் எண்ட்ரி ஆகி கடைசி வரை தாக்குப்பிடித்து இறுதி போட்டிக்கு இரண்டு நாட்கள் முன்பு அதாவது 103 வது நாளில் வெளியேறியவர் மைனா நந்தினி. பிக்பாஸ் கொடுத்த பணப்பெட்டியை எடுக்க அவருக்கு வாய்ப்பு இருந்தும் அவர் உறுதியாக பணப்பெட்டியை எடுக்காமல் இருந்தார் என்பதும் அமுதவாணன் ரூ.11.75 லட்சம் பணப்பெட்டியை எடுத்துச் சென்ற அன்று இரவே நந்தினியும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து மைனா நந்தினி வீட்டிற்கு திரும்பிய போது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் வரவேற்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் கேக் வெட்டி மைனாவுக்கு உறவினர்கள் ஊட்டி விடும் சந்தோஷமான காட்சிகள் உள்ளன.

இந்த நிலையில் இந்த வீடியோவை இறுதியில், ‘எல்லோரும் ட்ரீட் கேட்கிறீர்கள், சம்பளம் எப்போ வரும் என்று எனக்கு தெரியாது, சம்பளம் வந்தவுடன் ட்ரீட் வைக்கிறேன்’ என்று மைனா காமெடியாக கூறும் காட்சிகள் உள்ளன. மைனாவின் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.