பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. 2வது, 3வது இடம் யாருக்கு?

  • IndiaGlitz, [Sunday,January 22 2023]

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே ஒளிபரப்பாகி வரும் நிலையில் சற்றுமுன் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து தகவல் புகைப்படங்களுடன் சமூக வலைதளத்தில் கசிந்து உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களாக விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு மூவர் தேர்வு செய்யப்பட்டதாக சற்றுமுன் வெளியான புரமோவில் அறிவிக்கப்பட்டது.

எனவே இந்த சீசனின் வெற்றியாளர் யாராக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்த நிலையில் ஏற்கனவே கசிந்த தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராக அசீம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு டைட்டில் வின்னர் கோப்பையும், ரூ.50 லட்சம் பரிசுப்பணமும் வழங்கப்பட்டதாக சமூகவலைகளில் வெளியாகி வரும் புகைப்படங்களில் இருந்து தெரிய வருகிறது.

மேலும் இந்த சீசனின் ரன்னராக விக்ரமன் மற்றும் மூன்றாவது இடத்தை ஷிவின் ஆகியோர் பெற்றுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சீசனின் டைட்டிலை விக்ரமன் வெல்வார் என கடந்த சில நாட்களாக பார்வையாளர்கள் கணித்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் திடீரென அசீமுக்கு வாக்குகள் குவிந்து அவர் டைட்டில் வட்டத்தை தட்டிச் சென்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

இந்த சீசனின் இறுதி போட்டியாளர்கள்.. விக்ரமன், ஷிவின், அசீம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

 பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறப்போகிறது என்பதும் இன்னும் சில நிமிடங்களில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே.

விஜய் பாணியில் சந்தானம் அடுத்த படம்... அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகரான விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தையும் பிரபல தெலுங்கு தயாரிப்பு

விஷாலின் 'மார்க் ஆண்டனி' படத்தில் இணைந்த மலேசிய நடிகர்.. செம போஸ்டர்

விஷால் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்ததாக வெளியான செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது மலேசிய நடிகர் ஒருவர்

கையில் துப்பாக்கியுடன் தனுஷ்... 'கேப்டன் மில்லர்' படத்தின் ஒரு நிமிட வீடியோ ரிலீஸ்!

தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் ஒரு நிமிட வீடியோவை படக் குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

'D50' படத்தின் செம அப்டேட்.. இந்த ஒரே காரணத்தால் படம் சூப்பர் ஹிட்!

தனுஷ் நடித்து இயக்க இருக்கும் அவரது 50வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பது தெரிந்ததே.