ரூ.13 லட்சம் பணப்பெட்டியை எடுத்து வெளியேறியது இந்த போட்டியாளரா?

  • IndiaGlitz, [Friday,January 20 2023]

பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக பணமூட்டை மற்றும் பணப்பெட்டி ஆகிய இரண்டு வாய்ப்புகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் 3 லட்ச ரூபாய் பணமூட்டையை கதிரவன் எடுத்துக் கொண்டு வெளியேறினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பணப்பெட்டி 3 லட்ச ரூபாய் என்ற மதிப்புடன் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் அதன் மதிப்பு உயர்ந்து கொண்டே வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டப்போட்டியாளர்களான விக்ரமன், ஷிவின், அமுதவாணன், மைனா மற்றும் அசீம் ஆகிய ஐவரில் ஒருவர் இந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறுவார்கள் என்று கூறப்பட்டது.

விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேருக்குமே டைட்டில் வின்னர் பட்டத்திற்கான வாய்ப்பு இருப்பதால் அவர்கள் பணப்பெட்டியை எடுக்க வாய்ப்பில்லை என்றே கணிக்கப்பட்டது. இதனை அடுத்து மைனா அல்லது அமுதவாணன் ஆகிய இருவரில் ஒருவர் இந்த பணப்பெட்டியை எடுத்து வெளியே செல்வார்கள் என்றும் பார்வையாளர்கள் கணித்திருந்தனர்.

அதன்படியே சற்றுமுன் வெளியான தகவலின் படி அமுதவாணன் ரூபாய் 13 லட்சம் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ரூபாய் 21 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு விக்ரமன் வெளியேறியதாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது என்பதும் ஆனால் அதில் உண்மை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஜனவரி 26ல் வெளியாகும் தமிழ் வெப்தொடர்: ZEE5 அறிவிப்பு

முத்துக்குமார் இயக்கத்தில் எஸ். குஷ்மாவதி தயாரிப்பில் உருவான இந்தத் தொடரில் அறிமுக நடிகை அபி நக்ஷத்ரா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்

'ஜெயிலர்' திரைப்படத்தில் இணைந்த தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்களின் தகவல்கள்

இந்த வாரம் ஓடிடியில் ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்.. எந்த படம் தெரியுமா?

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் சுமார் 4 படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஓடிடியிலும் அதேபோன்று படங்கள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம். 

சன் டிவியில் அதற்குள் 'வாரிசு' திரைப்படமா? ஓடிடியில் எப்போது?

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக கடந்த 11ஆம் தேதி வெளியான நிலையில் இரண்டு படங்களுமே ஒரே வாரத்தில் 200 கோடிக்கு

மாப்ள சொம்பு கொடுத்தா தான் தாலி கட்டுவாராம்.. வடிவேல் காமெடியை நச் பதிலாக கொடுத்த நடிகை!

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் 'சொம்பில்  தண்ணீர் வேண்டும் என்று கேட்பார், ஆனால் அவர் சொம்பு கொடுத்தால் தான் தாலி கட்டுவேன் என்று கூறியதாக வதந்தி கிளம்பி சில நிமிடங்களில் அந்த திருமணமே நின்று