close
Choose your channels

இந்த வாரம் வெளியேறிய ராபர்ட் மாஸ்டரின் சம்பள தொகை எவ்வளவு?

Monday, November 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இதுவரை ஆறு போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும் அவர்களில் நேற்று வெளியேறிய ராபர்ட் மாஸ்டரும் ஒருவர் என்பதும் தெரிந்ததே

ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார் என்பதும் ஆரம்பத்தில் அவர் ரஞ்சிதாவை ரொமான்ஸ் செய்தது பார்வையாளர்களுக்கு சுவராசியமாக இருந்தாலும் போகப் போக அதுவே சலிப்படைய வைத்ததால் ராபர்ட் மாஸ்டர் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று வெளியேறிய ராபர்ட் மாஸ்டருக்கு சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. ராபர்ட் மாஸ்டருக்கு வாரத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் என பேசப்பட்டு இருந்ததாகவும் இதனை அடுத்து அவர் பிக்பாஸ் வீட்டில் ஏழு வாரங்கள் இருந்ததை அடுத்து அவருக்கு 14 லட்ச ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாந்திக்கு வாரம் ரூ.26 ஆயிரம் சம்பளம் என்றும், அசல் கோலாருக்கு வாரம் ரூ.17 ஆயிரம் சம்பளம் என்றும், ஷெரினாவுக்கு வாரம் ரூ.25 ஆயிரம் சம்பளம் என்றும், மகேஷ்வரிக்கு வாரம் ரூ.23 ஆயிரம் என்றும், நிவாசினிக்கு வாரம் ரூ.18 ஆயிரம் சம்பளம் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.