close
Choose your channels

ஒரே வார்த்தையில் விஜிக்கு பல்பு கொடுத்த மும்தாஜ்

Wednesday, September 5, 2018 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களின் உண்மையான சொரூபம் தற்போது வெளிவந்து கொண்டிருப்பதால் நிகழ்ச்சியும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக இந்த வார டாஸ்க் கோபக்காரர்களை குணமானவர்களாகவும், அறிவாளிகளை முட்டாளாகவும் முட்டாள்களை அடிமுட்டாளாகவும் மாற்றி வருகிறது.

இந்த நிலையில் விஜயலட்சுமிக்கு வரும் போன் காலில் பிக்பாஸில் உள்ள 'ஐ' லோகோவை டாட்டூவாக ரித்விகா வரைய ஒப்புக்கொள்ள செய்ய வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. ஆனால் விஜயலட்சுமி லோகோவிற்கு பதிலாக 'BIGGBOSSல் உள்ள I என்ற எழுத்தை டாட்டூவாக வரைய வேண்டும் என்று தவறாக கூறுகிறார்.

அப்போது மும்தாஜ் I அல்ல, EYE என்று கூறுகிறார். அவருடைய இந்த பதிலில் ஒரு கேலித்தனம் இருந்ததால் அதை பார்த்து பாலாஜி சிரிக்க, விஜயலட்சுமிக்கு அது சரியான பல்பாக கருதப்படுகிறது. ஏற்கனவே மும்தாஜ், விஜயலட்சுமிக்கும் இடையே பனிப்போர் நடந்து வரும் நிலையில் இந்த பல்பு விஜயலட்சுமியை மேலும் ஆத்திரப்படுத்தியுள்ளது. இதற்கு விஜயலட்சுமி என்ன பதிலடி கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்