close
Choose your channels

நேற்று வெளியேறிய குயின்ஸிக்கு லட்சக்கணக்கில் சம்பளமா?

Monday, December 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியிடப்பட்ட குயின்ஸிக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரை சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் என 6 பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று குறைந்த வாக்குகள் பெற்ற குயின்ஸி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் குயின்ஸிக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டிருந்ததாகவும், இதனை அடுத்து அவர் 54 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததை அடுத்து அவருக்கு ரூ.8 லட்சத்திற்கும் மேல் சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்த குயின்ஸி பெரிதாக எந்த வேலையும் செய்யவில்லை என்றும் அவர் முழு ஈடுபாட்டுடன் டாஸ்க்கை கூட விளையாடவில்லை என்றும் சாப்பிடுவதும், தூங்குவதும் மட்டுமே அவரது முக்கிய பணியாக இருந்தது என்றும் அவருக்கு லட்சக்கணக்கில் சம்பளமாக? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த வாரம் வெளியேறிய ராபர்ட் மாஸ்டருக்கு 14 லட்ச ரூபாய் சம்பளம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.