close
Choose your channels

உள்ளே இருந்தபோது ரக்சிதா .. வெளியேறியவுடன் குவின்ஸி.. ராபர்ட் மாஸ்டரின் பதிவு!

Friday, December 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ரக்சிதாவை காதல் பார்வையுடன் பார்த்துக் கொண்டு இருந்த ராபர்ட் மாஸ்டர், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உடன் குவின்ஸியை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் ராபர்ட் என்பதும் இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 50 நாட்கள் வரை தாக்குப்பிடித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே.

பிக்பாஸ் வீட்டில் இருந்த 50 நாட்களிலும் பெரும்பாலும் அவர் ரக்சிதாவை சுற்றி சுற்றி வந்தே காலத்தை கடத்தி விட்டார் என்பதே பார்வையாளர்களின் விமர்சனமாக உள்ளது.

இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய அடுத்த வாரமே குவின்ஸி வெளியேறினார் என்பதும் இருவரும் வீட்டிற்குள் இருக்கும் போது அப்பா மகள் போன்ற உறவுகளில் இருந்தார்கள் என்பதும் இந்த நிகழ்ச்சியை ரெகுலராக பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் குவின்ஸி வெளியேறும் போது தான் முதலில் ராபர்ட் மாஸ்டரைத்தான் பார்ப்பேன் என்று கூறிவந்த நிலையில் ராபர்ட் - குவின்ஸி சந்திப்பு சமீபத்தில் நடந்துள்ளது. ’ஐ லவ் மை டாட்டர்’ என குவின்ஸிக்கு அன்பு முத்தம் கொடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் ராபர்ட் பகிர்ந்து உள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.