close
Choose your channels

என் அம்மாவை எப்படி நீ இப்படி பேசலாம்.. கதறியழுத ஷிவின்.. யார் காரணம்?

Tuesday, November 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவின், ‘என் அம்மாவை நீ எப்படி இப்படி பேசலாம் என சக போட்டியாளரிடம் வாதிட்டு கதறி அழுத காட்சியின் வீடியோ சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பழங்குடியினர் மற்றும் ஏலியன்ஸ் இடையே நடக்கும் போட்டியின் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் பழங்குடியினராகவும் சில போட்டியாளர்கள் ஏலியன்ஸ்களாகவும் விளையாடி வருகின்றனர்

இந்த நிலையில் சற்று முன் வெளியான வீடியோவில் தனலட்சுமியிடம் ஷிவின் வாக்கு வாதம் செய்கிறார். என் அம்மாவை பற்றி கேவலமா பேசுவியா நீ?  என்று கேட்க , அதற்கு தனலட்சுமி ‘டாஸ்க் ஷிவின்’ என்று கூற, ’டாஸ்க்கிற்காக உன்னை நான் என்றைக்காவது கேவலப்படுத்தியிருக்கேனே? என்று கேட்கிறார்.

உனக்கு தெரியும், எனக்கு அம்மான்னா எவ்வளவு பிரியம்ன்னு, தெரிஞ்சும் நீ எப்படி இப்படி பேசலாம்’ என்று கூறுகிறார். அதன் பிறகு ஷிவின் தனியாக சென்று கதறி அழுத காட்சிகளுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வருகிறது. இந்த சம்பவம் தனலட்சுமிக்கு எந்த அளவு மைனஸ் ஆக போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.