கடைசி வாரத்தில் ஷிவினை கதறி அழவைத்த போட்டியாளர்: கமல் நெகிழ்ச்சி

  • IndiaGlitz, [Sunday,January 15 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் இன்று நடைபெற்று வரும் நிலையில் அடுத்த வாரம் கிரான்ட் ஃபினாலே நடைபெற உள்ளது என்பதும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் இந்த வீட்டில் உள்ள யாராவது ஒருவருக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆகணும் என்று நீங்கள் நினைக்கும் நபர் ஒருவரை சொல்லலாம்’ என கமல் கூற முதலாவது ஷிவின் எழுந்து, ரக்சிதாவை கூறுகிறார்.

அதன்பின் தனலட்சுமி என்ற ஒரு அழகான தங்கச்சி எனக்கு கிடைத்துள்ளார் என்று கதிரவன் கூறினார். இதனை அடுத்து ’என்னை அப்பா ஸ்தானத்தில் வைத்து அழைத்த குயின்ஸிக்கு நன்றி சொல்கிறேன் என்று ராபர்ட் மாஸ்டர் கூறுகிறார். இதனையடுத்து மகேஸ்வரி எழுந்து அசிம் அண்ணாவுடன் எனக்கு ஒரு பெரிய கனெக்ட் இருக்கிறது அவருக்கு எனது நன்றி என்று கூறினார்.

இதனையடுத்து ராம் எழுந்து, ‘என்க்கு ஒரு சிஸ்டர் இல்லையே என்ற உணர்வு இருந்தது, ஷிவின் என்ற தங்கை கிடைத்தவுடன் அந்த குறை எனக்கு இல்லாமல் போனது என்று கூற அதை கேட்டவுடன் ஷிவின் கதறி அழுத காட்சி அனைவருக்கும் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது. போட்டியாளர்கள் தங்கள் சக போட்டியாளருக்கு நன்றி கூறிக் கொள்வதை கமல் நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பதுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வந்தது.

More News

பிரபுதேவாவின் 60வது படம்.. இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் திரை உலகின் நடிகர், இயக்குனர் மற்றும் நடன இயக்குனரான பிரபுதேவாவின் 60வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

நீங்க தான் என் ஹீரோ.. என் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனை: வம்சி வெளியிட்ட வீடியோ

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி 'என் வாழ்நாளில் இதுதான் மிகப்பெரிய சாதனை, நீங்கள் தான் என்னுடைய ஹீரோ' என்று கூறி பதிவு செய்துள்ள நெகிழ்ச்சியான வீடியோ

மீண்டும் மணிரத்னம் உடன் மோதும் தனுஷ்?

தனுஷ் நடித்த 'நானே வருவேன்' என்ற திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ரிலீஸ் தினத்தில் ரிலீஸ் ஆனது என்பதும் 'பொன்னியின் செல்வன்'

'பாட்ஷா'வுடன் கனெக்சன் ஆகிறதா 'லால் சலாம்'?: 28 ஆண்டுக்கு பின் ரஜினி ஏற்கும் கேரக்டர்!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' என்ற திரைப்படம் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே போன்ற ஒரு கேரக்டரில் ரஜினிகாந்த், '

'காந்தாரா'வில் அந்த படத்தின் சாயல் உள்ளது: ரிஷப் ஷெட்டிக்கு கடிதம் எழுதிய கமல்ஹாசன்

சமீபத்தில் வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.