close
Choose your channels

இந்த வாரம் டபுள் எவிக்சனா? யார் யார் வெளியேற வாய்ப்பு?

Thursday, December 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர்களில் ஒருவர் வெளியேறி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் ஆகியோர் வெளியேறி உள்ள நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் கதிரவன், ஜனனி, ரக்சிதா, தனலட்சுமி, மைனா மற்றும் குயின்ஸி ஆகிய ஆறு போட்டியாளர்கள் உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இவர்களில் குறைந்த வாக்குகளை குயின்ஸி மற்றும் மைனா பெற்று இருப்பதாகவும் அதில் குயின்ஸி வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சீசனில் இதுவரை டபுள் எவிக்சன் இல்லை என்ற நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கலாம் என்றும் அதற்கு பதிலாக வைல்ட்கார்ட் எண்ட்ரி ஒருவர் வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேளை இந்த வாரம் டபுள் எவிக்சன் இருந்தால் மைனா மற்றும் குயின்ஸி ஆகிய இருவருமே வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.