close
Choose your channels

இந்த வார நாமினேஷன்.. 3 போட்டியாளர்கள் குறிவைக்கப்பட்டார்களா?

Monday, December 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் பட்டியல் வெளியாகும் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் சற்றுமுன் வெளியான வீடியோவில் போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்படும் காட்சி இடம்பெற்று உள்ளது. இதில் போட்டியாளர்கள் முதல்கட்டமாக ஆயிஷாவை நாமினேட் செய்கின்றனர். ஆயிஷாவை மைனா, விக்ரமன், அசீம், ஏடிகே ஆகியோர் நாமினேட் செய்கின்றனர். ஆயிஷா எல்லை மீறி போவதாகவும் வலிமையான போட்டியாளராக இல்லை என்றும் காரணமாக கூறுகின்றனர்

இதையடுத்து ராம் நாமினேட் செய்யப்படுகிறார். அவரை ரக்சிதா, மணிகண்டன், தனலட்சுமி ஆகியோர் நாமினேஷன் செய்கின்றனர். இதனை அடுத்து அசீமை ராம் நாமினேஷன் செய்கிறார். அமுதவாணன், விக்ரமன், கதிரவன் ஆகியோர்களும் அசீமை நாமினேட் செய்கின்றனர். அசீம் எப்போது என்ன செய்வார் என்று தெரியவில்லை என்றும் அதிகமாக கோபப்படுகிறார் என்றும் காரணங்களாக கூறப்படுகின்றன. இதனையடுத்து இந்த புரமோவில் இருந்து ஆயிஷா, ராம் மற்றும் அசீம் ஆகிய மூவர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.