'பயங்கரமான மேட்டரா இருக்கே'... கமல்ஹாசனே வியக்கும் அளவுக்கு விக்ரமன் சொன்ன விஷயம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 56வது நாளாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்றைய முதல் புரமோவில் ஜனனி, மைனா மற்றும் குயின்ஸி ஆகிய 3 வீரர்களுக்கும் 3 பெட்டிகள் மற்றும் 3 சாவிகள் கொடுத்ததை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இரண்டாவது புரமோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த புரமோவில், ‘இவர் பாராட்டினால் கண்டிப்பாக பின்னாடி போய் வேறு ஒன்று சொல்வார் என்று சொல்லும் ஒரு நபரை சுட்டிக் காட்டுங்கள் என்று கமல்ஹாசன் கூற தனலட்சுமி ’மைனாவை கூறுகிறார். அதேபோல் ’ஒவ்வொருமுறையும் வேறு வேறு மாதிரி பேசுவார் மைனா’ என்று ஜனனியும் கூறினார்

இதனை அடுத்து எழுந்த மைனா எனக்கு புறம் கூறும் வழக்கம் இருப்பதை நான் ஒத்துக் கொள்கிறேன் என்று கூறினார். இதனையடுத்து அமுதவாணன் அசீமை கூறினார். அதேபோல் ராமும் அசீமை கூறினார்

இதனை அடுத்து விக்ரமன் எழுந்து, ‘மணி உன்னை நான் தான் ஜெயிக்க வைப்பேன், கடைசி வரைக்கும் நான் தான் உன்னை ஜெயிக்க வைப்பேன் என்று அசீம் சொல்லிக்கொண்டே இருப்பார்’ எனக்கூற அப்போது கமல்ஹாசன் ’பயங்கரமான மேட்டரா இருக்கே’ என்று கூறுவதுடன் இன்றைய அடுத்த புரமோ முடிவுக்கு வருகிறது.

More News

'வீட்டில் இருந்து தான் புரட்சி தொடங்குகிறது': கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்தின் டைட்டில்!

 கீர்த்தி சுரேஷின் அடுத்த திரைப்படத்தை 'கேஜிஎப்' தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

'விக்ரம் 3', 'தளபதி 67' படத்தில் நடிக்க விரும்பவில்லை.. விஜய்சேதுபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் சந்தானம் என்ற ஆக்ரோசமான வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்த இருந்த நிலையில் அதே கேரக்டரில் மீண்டும் நடிக்க

3 பெட்டி 3 சாவி.. கமல் வைத்த வித்தியாசமான டாஸ்க்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 55 நாட்களாக நடந்து வரும் நிலையில் இன்று 56வது எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது என்பதும், இன்றைய கமல்ஹாசன் எபிசோடில் விறுவிறுப்பான காட்சிகள் இருக்கும்

காயத்ரி ரகுராம் இழந்த பதவியை பெற்ற இசையமைப்பாளர்: அண்ணாமலை அறிவிப்பு!

பாஜகவில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் வகித்து வந்த பதவி தற்போது பிரபல இசையமைப்பாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

'இது ஒரு அயோக்கியர்களின் ஆட்டம்': 'துணிவு' படம் குறித்து எச். வினோத்

அஜித் நடித்த 'துணிவு'  திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் எச் வினோத் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த படம்