close
Choose your channels

நீ ஒரு அட்டைக்கத்தி, ஸ்ட்ராங் பிளேயர் எல்லாம் இல்லை.. வறுத்தெடுத்த விக்ரமன்!

Friday, December 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீங்கள் ஒரு அட்டைக்கத்தி போட்டியாளர் என்றும் ஸ்ட்ராங்கான போட்டியாளர் இல்லை என்றும் நேருக்கு நேராக விக்ரமன் ஆவேசமாக கூறும் வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் அசீமின் நடவடிக்கைகள் எல்லை மீறி போவதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இரண்டு முறை கமல்ஹாசனே நேரடியாக அசீமை எச்சரித்தும் திருந்தாமல் மீண்டும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக இந்த வாரம் நடந்த டாஸ்க்கில் அடிதடியில் இறங்கியது சக போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றும் போட்டியாளர்கள் மத்தியில் பேசும் விக்ரமன், ‘அசீம் கை வைத்தது மிகவும் மோசமான ஒரு செயல் என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து பேச வந்த அசீம், நான் ஒரு ஸ்ட்ராங்கான போட்டியாளர் என்பதால் என்னை தாக்குவதன் மூலம் நீங்கள் பிரபலமாகலாம் என்று நினைக்கிறீர்கள் என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த விக்ரமன், ‘நீங்கள் ஒரு அட்டகத்தி என்பது எல்லாருக்கும் தெரியும். நீங்கள் ஸ்ட்ராங்கான போட்டியாளர் எல்லாம் இல்லை என பதிலடி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.