ஓவியாவை கெளரவப்படுத்த இணையும் அனிருத்-யுவன் கூட்டணி

  • IndiaGlitz, [Friday,August 25 2017]

பிக்பாஸ் ஓவியாவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ள நிலையில் அவர் அந்த நிகழ்ச்சியில் பேசிய ஒவ்வொரு வசனமும் டிரெண்ட் ஆகி வருகிறது. குறிப்பாக 'நீங்க ஷட்டப் பண்ணுங்க' என்ற வசனம் இன்றளவிலும் சமூக வலைத்தளங்களில் பிரபலம்.

இந்த நிலையில் இந்த வசனத்தையே பாடலின் முதல் வரியாக வைத்து யுவன்ஷங்கர் ராஜா கம்போஸ் செய்த பாடலை இளம் இசைப்புயல் அனிருத் பாடியுள்ளார். ஒவியாவை கெளரவிக்கும் வகையில் உருவான இந்த பாடல் ஜெய்-அஞ்சலி நடித்த பலூன் படத்தில் இடம்பெற்றூள்ளது.

இதுகுறித்து பலூன் பட இயக்குனர் சினிஷ் கூறியதாவது: யுவன் மற்றும் அனிருத் ஒரு பாடலுக்கு இணைவது இதுதான் முதல்முறை. இந்த பாடல் கம்போஸ் செய்து முடித்த பின்னர் இந்த பாடலை அனிருத் பாடினால் மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். இதுகுறித்து அனிருத்திடம் பேசியபோது, 'அவருடைய பிசியான ஷெட்யூலிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி இந்த பாடலை பாடிக்கொடுத்தார். 'நெருப்புடா' புகழ் அருண்காமராஜ் எழுதியுள்ள இந்த பாடல் காதலின் நன்மைகள் மற்றும் அதன் மறுபக்கம் குறித்து அலசும்.

வரும் 29ஆம் தேதி இந்த பாடலை வெளியிடவும், அதனையடுத்து யுவன்ஷங்கர் ராஜா பிறந்த நாளான ஆகஸ்ட் 31ஆம் தேதி இன்னொரு பாடலையும் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஜெய், அஞ்சலி நடித்துள்ள இந்த படம் வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகும்' .