close
Choose your channels

தர்ஷனின் நண்பரை திருமணம் செய்த பிக்பாஸ் 2 போட்டியாளர்

Tuesday, September 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா, பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் தர்ஷனின் நெருங்கிய நண்பரான சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்களின் பேத்தி ரம்யா. பாடகியான இவர் கடந்த சில ஆண்டுகளாக விஜய் டிவி தொடர்களில் நடித்து வரும் சத்யா என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் இந்த காதல் தற்போது திருமணம் வரை சென்றுள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி, மும்தாஜ் ஆகியோர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

மணமகன் சத்யா பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தர்ஷனின் நெருங்கிய நண்பர் என்பவதால் அவரது காதலியான சனம்ஷெட்டி இந்த திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு தர்ஷன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிக்பாஸ் போட்டியாளரான வைஷ்ணவியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது ரம்யாவின் திருமணம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.