கமல்ஹாசனின் 'பிக்பாஸ் 2' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,May 12 2018]

கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. சீரியல் முன் அடிமையாகியிருந்த பெண்கள் கூட, பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெகுலராக பார்க்க ஆரம்பித்தனர். குறிப்பாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை நடத்திய விதம், ஓவியாவின் உண்மை, ஆகியவை மக்களை பெரிதும் கவர்ந்தது.

இந்த நிலையில் பிக்பாஸ் 2' நிகழ்ச்சி அதே தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக தொலைக்காட்சியின் சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் மீண்டும் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் யார் யார்? என்பது இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது.

ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படும் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தான் அதை நிராகரித்துவிட்டதாகவும் நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.