close
Choose your channels

மும்தாஜை கார்னர் செய்யும் வைஷ்ணவி?

Monday, June 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் ஓரளவுக்கு இறுதிப்போட்டிக்கு நெருங்குவார் என்று எதிர்பார்க்கப்படுபவர் இப்போதைக்கு மும்தாஜ் மட்டுமே. இதனால் முதலில் மும்தாஜை வெளியேற்ற போட்டியாளர்கள் முடிவு செய்து அவரை கார்னர் செய்ய முயற்சி செய்வதாக தோன்றுகிறது.

சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் மும்தாஜ் குறித்து வைஷ்ணவி சொல்லும் விஷயங்கள் அந்த வகையில் தான் உள்ளது. உடம்புக்கு முடியலைன்னா எதுக்கு பிக்பாஸ் வீட்டுக்கு வரணும்', ' ஒருகாலத்தில் ஃபேமஸ் ஆக இருந்த ஓகே, இப்போ திரும்பவும் உன் ரசிகர்கள் உன்னை பாராட்டணும்ன்னுதான் இங்க வந்திருக்க' என்று மும்தாஜ் குறித்து வைஷ்ணவி, டேனியலிடம் கூறுவது மும்தாஜை கார்னர் செய்யும் வகையில் உள்ளது.

ஆனால் விஜய் டிவி புரமோவை நம்ப முடியாது என்பது கடந்த ஒர் வார அனுபவத்தில் தெரிந்துள்ளது. புரமோவில் இருக்கும் டயலாக் சம்பந்தமே இல்லாமல் நிகழ்ச்சியில் வேறு ஒரு இடத்தில் இருக்கும் வகையில் எடிட்டிங் செய்யபப்ட்டிருக்கும். எனவே இன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் வரை பொறுத்திருப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.