பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோட்டைவிட்டவர் 'குக் வித் கோமாளி'யில் டைட்டில் வெல்வாரா?

  • IndiaGlitz, [Saturday,July 17 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தை கோட்டைவிட்ட பிரபலம் ஒருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. ரம்யா பாண்டியன், ரேகா ஆகியோர் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சனம்ஷெட்டி, குக் வித் கோமாளி சீசன் 3 இல் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி சீசன் 3 வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் தொடங்கும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது போட்டியாளர்களும் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட சனம்ஷெட்டி, குக் வித் கோமாளி சீசன் 3 இல் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவர் சனம்ஷெட்டி. ஆனால் திடீரென எதிர்பாராத வகையில் அவர் இடையிலேயே வெளியேறி விட்டதால் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் பட்டம் வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சீசன் 3 மிகவும் பிரமாண்டமாக நடத்த விஜய் டிவி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக போட்டியாளர்கள் அனைவருமே பிரபலமாக இருக்கும் வகையிலும் கோமாளிகள் வேற லெவலில் இருக்கும் வகையில் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

'பீஸ்ட்' சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது? உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்!

தளபதி விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படப்பிடிப்பில் விஜய்,

மனிதாபிமானம் கொண்ட திருடன்....! திருச்சியில் நடந்த அதிசயம்....!

பெண்ணிடம் ஹேண்ட்பேக்கை திருடிச்சென்ற திருடன், போனில் பேசி கெஞ்சியதால்,

சமையல் எண்ணெயை திரும்ப திரும்ப பயன்படுத்தலாமா? மருத்துவப் பதில்!

உணவு வகைகளில் சமையல் எண்ணெய் என்பது மிகவும் அத்யாவசியமான பொருளாக இருக்கிறது.

கார் வரி விவகாரம்: நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு!

விஜய் வாங்கிய வெளிநாட்டு கார் வரி விவகாரம் குறித்த தீர்ப்பு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த நிலையில் அந்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து விஜய் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் .

அஜித்துக்கு ஒரு எலும்பே எடுத்துட்டாங்க: ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேட்டி!

தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் இயக்குனர்களில் ஒருவரான கணல் கண்ணன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அஜித்துக்கு ஒரு எலும்பையே எடுத்து விட்டதாக கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது