close
Choose your channels

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்கும் தேதி, நேரம் அறிவிப்பு

Thursday, September 24, 2020 • தமிழ் Comments

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் நான்காம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது விஜய் டிவியை தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்க இருப்பதாகவும் அன்றைய தினம் பிக்பாஸ் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கு அடுத்த நாள் முதல் திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் இரவு 9.30 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் பிக்பாஸ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தாலும் ஐபிஎல் போட்டி நடைபெறும் அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாவதால் ரசிகர்கள் எதை பார்ப்பது என்ற குழப்பம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz