close
Choose your channels

பிக்பாஸ் ஆரவ் படத்தின் டைட்டில் குறித்த தகவல்

Thursday, July 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டவர் ஆரவ். ஆரவ்வும் ஓவியாவும் காதலிப்பதாக கூறப்பட்டாலும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபின்னரும் இருவரும் நட்புடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வின்னரான ஆரவ், ஒருசில திரைப்படங்களில் நடிக்க கதை கேட்டு கொண்டிருப்பதாகவும், அவர் நடிக்கும் படம் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆரவ் நடிக்கும் படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கும் படத்தில் தான் ஆரவ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய்ஸ்ரீ ஏற்கனவே சாருஹாசன் நடித்த 'தாதா 87' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆரவ் நடிப்பில் விஜய்ஸ்ரீ இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் டைட்டில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த தகவலை ஆரவ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.