close
Choose your channels

பிக்பாஸ் அபிராமியின் த்ரோபேக் கிளாமர் புகைப்படங்கள்!

Saturday, June 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அபிராமி வெங்கடாச்சலம் என்பதும் இவர் அந்த நிகழ்ச்சியில் முதலில் கவினை காதலித்து அதன்பின் டைட்டில் வின்னர் முகினை காதலித்ததாகவும் கூறப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரையுலகில் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த அபிராமிக்கு மற்ற போட்டியாளர்களை போல் அவருக்கும் எந்த வாய்ப்பும் கிட்டவில்லை.

அபிராமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அஜித்துடன் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ரிலீஸாகி நல்ல வெற்றி பெற்ற போதிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் அபிராமி வெங்கடாச்சலம், சமீபத்தில் த்ரோபேக் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படங்கள் இவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்குகு பின்னணியாக அவர் ’மின்னலே’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘வசீகரா’ என்ற பாடலின் பின்னணி இசையை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம்போல் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்கள் தங்களுடைய சுவராசியமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.