தள்ளி நில்றி, வயிறு எரியுது: விஜய், ராஷ்மிகா புகைப்படத்திற்கு பிக்பாஸ் நடிகை கமெண்ட்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது என்பதும் இந்த பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, வம்சி, சரத்குமார், தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் .

குறிப்பாக விஜய்யுடன் ஒரு ரசிகையாக பல்வேறு போஸ்களில் ராஷ்மிகா மந்தனா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் நடிகையும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான காஜல் பசுபதி தனது சமூக வலைத்தளத்தில் விஜய், ராஷ்மிகா இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து 'தள்ளி நில்றி’ என்று கமென்ட் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து ’என்னாச்சு’ என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ’வயிறு எரியுது’ என்று கூறியுள்ளார்.

மேலும் விஜய்யுடன் நீங்கள் எப்போது நடிப்பீர்கள்? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ’சாவதற்கு முன் ஒரு முறை நடித்து விடுவேன்’ என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.