close
Choose your channels

முதலில் BMW கார், அடுத்து துபாயில் வீடு: பிக்பாஸ் நடிகைக்கு பரிசுகளை குவிக்கும் காதலர்!

Friday, May 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகைக்கு முதலில் BMW கார் வாங்கி கொடுத்த அவரது காதலர், தற்போது துபாயில் வீடு வாங்கி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பாலிவுட் நடிகையும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான நடிகை ராக்கி சாவந்த், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது கணவர் ரித்தேஷ் என்பவரை பிரிவதாக அறிவித்தார். இந்த நிலையில் தற்போது அவர் ஆதில்கான் துரானி என்பவரை காதலித்து வருவதாக தெரிவித்து இருந்தார்.

காதலி ராக்கி சாவந்த்துக்கு முதலில் BMW காரை பரிசாக அளித்த ஆதில்கான், தற்போது துபாயில் அவருக்கு வீடு வாங்கி கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ராக்கி சாவந்த் கூறியபோது ’துபாயில் எனது பெயரில் ஆதில் வீடு வாங்கி கொடுத்தது உண்மைதான். அதற்கு முன்பு BMW வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவரது பரிசுகளை விட அவரது அன்பு தான் எனக்கு பொக்கிஷம். அவர் என் மீது வைத்திருக்கும் உண்மையான காதல் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் நேர்மையானவ,ர் என்னை அதிகம் காதலிக்கிறார், அவரின் குடும்பத்தாருக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தார்’ என்று கூறியுள்ளார்.

ராக்கி சாவந்தை விட அவரது காதலர் ஆதில்கான் ஆறு வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.