close
Choose your channels

சில்க் ஸ்மிதாகவே மாறிய பிக்பாஸ் நடிகை: ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ்

Wednesday, May 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர், சில்க் ஸ்மிதா மாதிரியே போட்டோஷுட் புகைப்படங்கள் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் செம ரெஸ்பான்ஸ்ஸை பெற்றுவருகிறது.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை காஜல். நடன இயக்குநர் சாண்டியின் முன்னாள் மனைவியான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அவரது பதிவுகள் சினிமா சம்பந்தப்பட்டது மட்டுமின்றி அரசியல் மற்றும் சமூக கருத்துக்களையும் அடங்கி இருந்தன என்பதும், நக்கலாகவும், காமெடியாகவும் அதே நேரத்தில் அழுத்தமாகவும் தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் சில்க் ஸ்மிதா போன்ற காஸ்டியூமில் சமீபத்தில் போட்டோ ஷூட் புகைப்படத்தை எடுத்து அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் காஜல் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவித்து வருகிறது. இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக ’தலைவி மாதிரி யாராலும் வர முடியாது, இருந்தாலும் தலைவி மாதிரி டிரை பண்றது தப்பு இல்லை’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.