அந்தரங்க விஷயங்களை பேசுவதற்காக யூடியூப் சேனல் ஆரம்பித்த 'பிக்பாஸ் தமிழ்' நடிகை!
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அந்தரங்க விஷயங்களை பேசுவதற்காகவே யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரேஷ்மா. இவர் ’வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது உருக்கமான சோக கதையை கூறி அனைவர் மனதையும் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் சாண்டி நடித்து வரும் 3:33 என்ற திரைப்படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனலை ஆரம்பித்த ரேஷ்மா அதில் அந்தரங்க விஷயங்கள் குறித்து குறிப்பாக பெண்களின் உள்ளாடைகள் குறித்து விரைவில் ஒரு வீடியோவை வெளியிடவுள்ளாராம். பெண்களுக்கு உள்ளாடைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த போவதாகவும் உள்ளாடை குறித்த பல சந்தேகங்களை அவர் தீர்க்க போவதாகவும் விளம்பரம் ஒன்றை அறிவித்துள்ளார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.