மாடி தோட்டத்தில் விளைந்த மஞ்சளை அறுவடை செய்து பொங்கல் கொண்டாடிய தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Saturday,January 15 2022]

மாடியில் போட்ட தோட்டத்தில் விளைந்த மஞ்சளை அறுவடை செய்து பொங்கல் கொண்டாடிய நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது குறித்த வீடியோவை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் நடிகையுமான ரம்யா பாண்டியன் தனது வீட்டில் மாடியில் போட்ட தோட்டத்தில் விளைந்த மஞ்சள் அறுவடை செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பொங்கலை முன்னிட்டு வளமான விளைச்சலைத் தந்த இயற்கை அன்னைக்கு தனது நன்றியை செலுத்தி கொள்வதாகவும் இந்த நன்னாளில் எனது மாடித் தோட்டத்தில் விளைந்த மஞ்சளை அறுவடை செய்ததை அளவற்ற மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என்றும் ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். ரம்யா பாண்டியனின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவுக்கு கீர்த்தி பாண்டியன் உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரம்யா பாண்டியன் நடித்த ’ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர், ’இடும்பன்காரி’ என்ற தமிழ் திரைப்படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தலப்பொங்கல்' கொண்டாடவிருந்த தமிழ் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் நடிகை ஒருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில் நேற்று அவர் 'தலப்பொங்கல்' கொண்டாட இருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் நாயகியாகும் பிக்பாஸ் போட்டியாளர்!

'எல்கேஜி' மற்றும் 'மூக்குத்தி அம்மன்' ஆகிய படங்களை இயக்கிய ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லாக்டவுன் தொடர்ந்தாலும் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும்: 'மாநாடு' நாயகியின் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் திட்டமிட்டபடி எங்கள் படம் ரிலீசாகும் என 'மாநாடு'

பிக்பாஸ் ஃபினாலேவுக்கு டைட்டில் வின்னரே வரவில்லையா? சுரேஷ் சக்கரவர்த்தியின் நக்கல் டுவிட்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நூறு நாட்களுக்கு மேல் நடைபெற்ற நிலையில் நாளை இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெற உள்ளது என்பதும் இறுதி போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் நாளை

சியான் விக்ரமின் 'மஹான்' ரன்னிங் டைம் இவ்வளவா? ரிலீஸ் தேதி எப்போது?

சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்த 'மஹான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.