நடுரோட்டில் யூடியூபர் கன்னத்தில் அறைந்த பிக்பாஸ் நடிகை: திருப்பி அடித்த யூடியூபர்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,May 18 2022]

பிரபல யூடியூபர் ஒருவரை பிக்பாஸ் நடிகை நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த நிலையில் அந்த யூடியூபர் திருப்பி நடிகையின் கன்னத்தில் அறைந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை கராத்தே கல்யாணி. இவர் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் பாஜகவில் இணைந்த இவர் தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் யூடியூபர் ஸ்ரீகாந்த் ரெட்டி என்பவரை கடந்த வியாழக்கிழமை சாலையில் தற்செயலாகச் சந்தித்த கராத்தே கல்யாணி, ஏன் உங்களது சேனலில் பெண்களை பற்றி தவறாக பேசுகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில் திடீரென ஸ்ரீகாந்த் ரெட்டியின் கன்னத்தில் கராத்தே கல்யாணி அடித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகாந்த் ரெட்டி கல்யாணியை திருப்பி அடித்துள்ளார். இருவரும் மாறி மாறி அடித்து கொண்டு நடுரோட்டில் சண்டை போட்ட சம்பவம் அந்த பகுதி உள்ள பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் இருவரும் மாறிமாறி தங்களது செல்போன்களில் இந்த சண்டையை வீடியோ எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி இருவரும் மாறிமாறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் இந்த புகார்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 

More News

உன் அட்வைஸ் கூந்தலை நீயே வச்சுக்கோ: கமெண்ட் போட்ட பெண்ணுக்கு பதிலடி கொடுத்த விஜயலட்சுமி!

கமெண்ட் மூலம் அட்வைஸ் செய்த பெண் ஒருவருக்கு 'உன் அட்வைஸ் கூந்தலை நீயே வைத்துக் கொள்' என நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிம்புவின் 'புல்லட்' பாடலுக்கு நடனமாடும் சின்னத்திரை பிரபலங்கள்!

 சிம்பு பாடிய புல்லட் பாடலுக்கு சின்னத்திரை பிரபலங்கள் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் சூர்யாவின் காட்சிகள் எத்தனை நிமிடங்கள்? 

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' திரைப்படத்தில் சூர்யா நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது   சூர்யாவின் காட்சிகள்

சர்வதேச அங்கீகாரம் பெறும் லெஜண்ட் சரவணன் படம்: திரையுலகினர் வாழ்த்து!

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவான 'தி லெஜன்ட்' என்ற திரைப்படம் சர்வதேச அங்கீகாரம் பெற்றதை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கோழிக்கு ஒரு நியாயம், பசுவுக்கு ஒரு நியாயமா? மாட்டிறைச்சி குறித்து இளம் நடிகை காட்டம்!

மலையாள மொழி சினிமாக்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் நடிகை நிகிலா விமல் சமீபத்தில்