மீண்டும் ரீஎண்ட்ரி ஆன சுஜா வருணி: எந்த படத்தில் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,December 02 2021]

பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட்கார்ட் எண்ட்ரியான நடிகை சுஜா வருணி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திருமணமாகி குழந்தைக்கு தாயான சுஜா தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு 'த்ருஷ்யம் 2' வில் நடித்துள்ளார்.

நடிகர் வெங்கடேஷ் , மீனா நடிப்பில் தயாராகி, தெலுங்கில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் 'த்ருஷ்யம் 2'. இப்படத்தில் நடிகை சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நடித்திருக்கும் இவர், தன்னுடைய தனித்துவமான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, தன்னுடைய துணிச்சலான குணத்தையும், அன்பான பண்பு நலனையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை சுஜா வருணி.

அவருடைய கடின உழைப்பிற்கு மீண்டும் அங்கீகாரமும், அடையாளமும் கிடைத்திருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு ஏராளமான பெண் தொழில் முனைவோர்களை உத்வேகத்துடன் ஊக்கப்படுத்தி உருவாக்கிய இவர், 'சுசீஸ் ஃபன்' என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு 'த்ருஷ்யம் 2' படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இதன் மூலம் மீண்டும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் அழுத்தமான வேடங்களில் நடிக்க தயாராகி இருக்கிறார்.

'த்ருஷ்யம் 2' படத்தில் நடித்ததைப் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க, தமிழிலும் வாய்ப்பு கிடைத்து வருவதால், அவர் விரைவில் தமிழிலும் மீண்டும் நடிக்கக்கூடும் என தெரிய வருகிறது.

More News

'மாநாடு' வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த மோகன்லால்: காரணம் இதுதான்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தின் வெற்றி தமிழ் திரை உலகிற்கே ஊக்கமளிக்கும் வகையில்

கடைசி விவசாயி படக்குழு மீது இசைஞானி இளையராஜா திடீர் புகார்!

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “கடைசி விவசாயி“. இந்த

கண்மணி அன்போட காதலன் நான் எழுதிய டயலாக்: டப்பிங்கில் விக்னேஷ் சிவன் - நயன் ரொமான்ஸ்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் விரைவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

இந்த பந்தம் என்றும் மாறாது… திருமணநாளில் அன்பு வார்த்தை பகிர்ந்த நட்சத்திர ஜோடி!

ஹாலிவுட்டில் நட்சத்திர ஜோடிகளாக வலம்வரும் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பாடகர் நிக் ஜோனாஸ் இருவரும் தங்களது

இந்திய அணியை கதறவிட்ட இளம் வீரர்… யார் இந்த  ரச்சின் ரவீந்திரா?

நியூசிலாந்துக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றிப்பெற்றிருக்கும்.