close
Choose your channels

அச்சு அசலாக குந்தவையாக மாறிய பிக்பாஸ் நடிகை: பாராட்டு தெரிவித்த த்ரிஷா!

Tuesday, October 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நடிகை ஒருவர் அச்சு அசலாக குந்தவை கெட்டப்பில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு த்ரிஷாவே பாராட்டு தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்த நடிகர்களின் கெட்டப்பில் பல நடிகர், நடிகைகள் போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராயின் கெட்டப்பிலும், குந்தவையாக நடித்த த்ரிஷாவின் கெட்டப்பிலும் பல நடிகைகள் போட்டோஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சனம் ஷெட்டி, குந்தவை த்ரிஷா போன்றே அச்சு அசலாக போட்டோஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புகைப்படங்களை த்ரிஷாவே பாராட்டியதாகவும், அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.