டாஸ்குகள் முடிவுக்கு பின் நாமினேஷனில் இருப்பவர்கள் யார் யார்? பிக்பாஸ் அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் செய்யப்படுவதாகவும் ஆனால் அடுத்தடுத்து நடைபெறும் டாஸ்குகளில் வெற்றி பெறும் நபர்கள் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் பிக்பாஸ் அறிவித்திருந்தார்.

அந்த வகையில் இந்த வாரம் முழுவதும் நடந்த டாஸ்க்கில் வெற்றி பெற்ற சிபி, தாமரை, சஞ்சீவ், அமீர், நிரூப் ஆகியோர் வெற்றி பெற்று நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது இந்த வார நாமினேஷனில் இருப்பவர்கள் யார் யார் என்பது குறித்து அறிவிப்பை பிக்பாஸ் வெளியிட்டுள்ளார்.

அதன்படி இந்த வார நாமினேஷனில் தொடரும் நபர்கள் அதனை பிரியங்கா, அபினய், பாவனி, வருண், அக்சரா மற்றும் ராஜு ஆகியோர் தொடர்வதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார் நாமினேஷன் செய்யப்பட்ட இந்த 6 பேர்களில் இந்த வாரம் வெளியேறுபவர் யாராக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.