close
Choose your channels

காதலை அழகாக புரபோஸ் செய்த பிக்பாஸ் ஆயிஷா.. காதலர் தினத்தில் டுவிஸ்ட்?

Friday, February 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிஷா தனது காதலை புரபோஸ் செய்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் ஆறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஆயிஷா என்பதும் இவர் ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றாலும் போகப்போக அவரது நடவடிக்கையை பார்வையாளர்களுக்கு பிடிக்காததால் வெளியேற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது காதலரின் முகத்தை காட்டாமல் ஒரு புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் தற்போது காதலை மிக அழகாக புரபோஸ் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் வரும் காதலர் தினத்தில் தனது காதலரை அவர் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் ஆயிஷாவின் காதலர் யாராக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் நிறைந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.