பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் நடிக்கும் படம்..  செம டைட்டில்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி என்பது தெரிந்ததே. இவர் அந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பதும் அதன் பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்றார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் பாலாஜி ஹீரோவாக திரைப்படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் இந்த படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் ரவீந்தர் தயாரித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டைட்டில் ’மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்’ என வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ப்ரியா மாலி என்ற பெண் இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் பாலாஜி முதல் முறையாக ஹீரோ வேடத்தில் நடிக்கும் இந்த படம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஐஸ்வர்யா ராய் பிரமாதம்.. நந்தினிக்கு டப்பிங் கொடுத்த பிரபலத்தின் பதிவு!

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பிரமாதமாக நடித்து இருந்தார் என்றும் டப்பிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இல்லாமல் தமிழ்

ஒருநாள் என் மகள் அமெரிக்காவில் ஓட்டு போடுவார்: கமலா ஹாரிஸை சந்தித்த விஜய் பட நடிகை!

 என் மகள் ஒருநாள் அமெரிக்காவில் ஓட்டு போடுவார் என விஜய் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

'பொன்னியின் செல்வன்' இரண்டு நாள் வசூல் இத்தனை கோடியா? 'விக்ரம்' வசூலை முறியடிக்குமா?

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அமரர் கல்கியின் குடும்பத்தினர்களை கெளரவப்படுத்திய பொன்னியின் செல்வன் படக்குழு!

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது என்பதும் இந்த படம் இரண்டே நாட்களில் 150

'டைம் என்ன மேடம்? வாட்சுகளை மட்டுமே ஆடையை உடுத்திய பிக்பாஸ் பிரபலம்!

வாட்சுகளை மட்டுமே ஆடையாக உடுத்திய பிக்பாஸ் பிரபலம் ஒருவரை டைம் என்ன மேடம்? என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் கேள்வி கேட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.