close
Choose your channels

உன் மோசமான நகைச்சுவைக்கு சிரிப்பவரை கண்டுபிடித்திருக்கிறாய்.. பிரியங்கா திருமணம் குறித்து பிக்பாஸ் பிரபலம்..

Thursday, April 17, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி பிரபலம் பிரியங்கா, நேற்று வசி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் மட்டுமல்லாமல், சின்னத்திரை உலகை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் போட்டியாளர் நிரூப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்காவுக்கு தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், "நீ பல விஷயங்களை கடந்து வந்த பிறகு, உன்னை நேசிக்க கூடிய ஒரு காதலுக்குள் நுழைந்திருக்கிறாய் என்பதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. நீண்ட இரவுக்கு பிறகு சூரியன் உதயம் ஆனதைப் போல, உன்னுடைய திருமண செய்தியை கேட்ட பிறகு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி தான் இது.

உன்னை காதலிக்கும் நபராக மட்டும் இல்லாமல், உன்னை புரிந்து கொள்ளும் நபராகவும், உன்னை மதிக்கும் நபராகவும், நீ சொல்லும் மோசமான நகைச்சுவைக்கு கூட சிரிக்கும் நபர் ஒருவரை கண்டுபிடித்திருக்கிறாய்.

நான் உனக்காக சந்தோஷப்படுகிறேன். நீ எதிர்பார்த்த எல்லா தருணங்களையும் இந்த புதிய அத்தியாயம் கொண்டு வரும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

பிரியங்கா மற்றும் நிரூப், இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் இருவரும் போட்டியாளர்களாக பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த சீசனில் பிரியங்காவுக்கு இரண்டாவது இடமும், நிரூபுக்கு ஐந்தாவது இடமும் கிடைத்தது என்பது அனைவரும் அறிந்த செய்தியே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment