பிக்பாஸ் ராஜூ ஜெயமோகன் காதல் கதை: இத்தனை வருட லவ்வா?

பிக்பாஸ் சீசன் 5 நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ளும் 18 போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.

நேற்றைய முதல் நாளில் முழுக்க முழுக்க போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக இருந்தனர் என்பதும் குறிப்பாக ராஜூ ஜெயமோகன் மற்ற போட்டியாளர்களை கலகலப்பாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

போட்டியாளர்களில் ஒருவரான இக்கி பெர்ரியை ஜமீன் கோட்டை படத்தில் வரும் பேய் போல இருப்பது போன்று கூறுவதும், தாமரைச்செல்வியிடம் பேய் கதை கூறுவதும், அக்சரா ரெட்டியை அமலா போன்றும், அமலாபால் போன்றும் இருப்பதாக கூறி கலாய்ப்பதும் ஜெயமோகனின் காமெடி ரசிக்கும் வகையில் இருந்தது.

இந்த நிலையில் ராஜூ ஜெயமோகன் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்பதும் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்லூரி சாலை, ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், பாரதி கண்ணம்மா போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. அதேபோல் கவின் நடித்த ’நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ராஜூ ஜெயமோகன் காதல் கதை என்பது ஒரு தனி கதை. அவர் 12 வருடமாக தாரிகா என்ற பெண்ணை காதலித்தார் என்பதும், சமீபத்தில் தான் அவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் ராஜூ ஜெயமோகன் தனது காதல், திருமணம், திருமணத்தில் நடந்த அமளிதுமளி ஆகியவற்றை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியின் வீடியோ இதோ:

More News

ஒருவேளை சாப்பாடு தான், போட்டுக்க துணிகூட இல்லை: நெகிழ வைத்த பிக்பாஸ் போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் நேற்று முன்தினம் தொடங்கி, போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர் என்பதும் அதன் பின்னர் நேற்றைய முதல் நாளில் போட்டியாளர்கள்

சி.எம் ஆகனும்ன்னு 100 நாளில் நீ பண்ற வேலையிருக்கே.. கமல்ஹாசனை கலாய்த்த பிக்பாஸ் போட்டியாளர்!

நூறு நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி தமிழ்நாடு முதலமைச்சராக ஆகிவிட வேண்டும் என நீ பண்ற வேலையெல்லாம் இருக்கே.. என பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும்

சுரேஷ் காமாட்சியின் அடுத்த படம்: இன்று முதல் படப்பிடிப்பு!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான சிம்புவின் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

டெல்லியிடம் மீண்டும் தோல்விதானா? சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஐபிஎல் 2021 தொடரின் 50 ஆவது லீக் போட்டி இன்று சென்னை சிஎஸ்கேவிற்கும் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கும்

இன்றைய சிஎஸ்கே மேட்சில் முக்கிய வீரர் இல்லையா? கலங்கும் ரசிகர்கள்!

ஐபிஎல் 2021 தொடரின் லீக் சுற்றுப்போட்டிகள் அனைத்தும் இந்த வாரம் முடிவடைய இருக்கிறது.