பூர்ணிமாவிடம் கட்டிப்பிடி வைத்தியம் குறித்து விளக்கும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்..!

  • IndiaGlitz, [Saturday,November 11 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக நான் தான் வருவேன் என நம்பிக்கை உடன் இருக்கும் விக்ரம் சரவணன் பூர்ணிமாவிடம் கட்டிப்பிடி வைத்தியம் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான விக்ரம் சரவணன் தனக்குத் தானே பேசிக் கொண்ட வீடியோ வெளியானது. அதில் தான் நன்றாக விளையாடிருப்பதாகவும், டாஸ்க்கிலும் நன்றாக செய்திருப்பதாகவும் விசித்ராவிடம் தைரியமாக சண்டை போட்டதாகவும் தனக்கு தானே பெருமையாக பேசிக்கொண்டார். ஆனால் விசித்ராவுடன் அவர் சண்டைபோட்டபோது விசித்ரா அவரை எப்படி நோஸ்கட் செய்தார் என்பது நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்

ஆனால் விக்ரம் சரவணன் தன்னுடைய விளையாட்டு குறித்து தனக்கே பெருமையாக இருப்பதாகவும் அனேகமாக இந்த சீசன் டைட்டில் வின்னராக நான் தான் வருவேன் என்றும் கூறியிருந்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி, பார்வையாளர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.

இந்த நிலையில் விக்ரம் சரவணன் பூர்ணிமாவிடம் பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டில் வந்ததிலிருந்து நான் ஒரு மாதிரி இருந்தேன். ஆனால் நீ என்னை கட்டிப்பிடித்த உடன் எனக்கு கொஞ்சம் தெம்பு வந்தது, அது என்னவென்று எனக்கு சொல்ல தெரியவில்லை என்று கட்டிப்பிடி வைத்தியம் குறித்து கூறினார். இதை கேட்டு பூர்ணிமா அவரது கையைப் பிடித்துக் கொண்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். அதன் பிறகு விக்ரம் குறித்து பெருமையாக பூர்ணிமா சொல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது.

More News

டி ராஜேந்தர் அறிமுகம் செய்த ஹீரோ மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர் அஞ்சலி..!

டி ராஜேந்தர் இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் கங்கா மாரடைப்பால் சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மாயா குரூப்பில் இருந்த முக்கிய போட்டியாளர் எலிமினேஷன்.. பிக்பாஸ் வீட்டில் எதிர்பாராத திருப்பம்?

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக  பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின்

முக்கிய விதியை மீறிய மாயா -ஐஷு: இதையாவது கமல்ஹாசன் கேட்பாரா?

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அவ்வப்போது சில விதிமுறைகளை மீறுவது என்பது சகஜம் தான். முதல் சீசனிலிருந்து 7வது சீசன் வரை பலமுறை இது நடந்துள்ளது.

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படங்கள்.. ஏதாவது ஒன்று பின் வாங்குமா?

 தீபாவளி விருந்தாக 'ஜப்பான்' 'ஜிகர்தண்டா 2' உள்பட சில படங்கள் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அடுத்த கட்டமாக பொங்கல் விருந்தாக சில படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை பார்த்தோம்.

ரஜினி ரசிகர்களுக்கு சரியான தீபாவளி விருந்து.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லைகா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சரியான தீபாவளி விருந்தாக லைகாவின் அறிவிப்பு வெளியாகியுள்ளதை அடுத்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்