close
Choose your channels

வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய பிக்பாஸ் தனம்.. வீடியோவை பார்த்த ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்!

Thursday, January 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமி வித்தியாசமான முறையில் தனது காதலை வெளிப்படுத்திய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் இந்த நிகழ்ச்சி தற்போது நிறைவு கட்டத்தை எட்டிவிட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மக்களின் பிரதிநிதியான தனலட்சுமிக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்திலிருந்து அபாரமாக தனலட்சுமி விளையாடி வந்தார் என்பதும் ஆண் போட்டியாளர்களுக்கு நிகராக டாஸ்குகள் உள்பட அனைத்தையும் விளையாடி கமலஹாசனிடமும் பார்வையாளர்களிடமும் பாராட்டைப் பெற்றார். குறிப்பாக தனக்கு அசீமால்அநீதி நிகழ்ந்த போது அதை எதிர்த்து தைரியமாக வாதாடினார்.

இந்த நிலையில் 70 நாள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்த தனலட்சுமி எவிக்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் லோகோவை தனது கையில் அவர் டாட்டூ வரைந்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் அந்த அளவு காதலிப்பதாக குறிப்பிடும் வகையில் அவர் இந்த டாட்டுவை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.